Thursday, April 16, 2009

பிரபாகரனின் வார்த்தைகள்

காமராசருக்கு அடுத்து ஒரு தமிழ் தலைவர் பற்றி..

அவர் சொன்னது..


  • Nature is my friend. Life is my philosopher. History is my path-finger.



  • Fear is the outcome of weakness, a coward’s friend, an enemy of firmness. Fear of death is the cause of all human fears. One who wins the fear of death wins himself. He is the one who wins the freedom. From his mental prison.



  • Whether we like it or not the change has occurred, struggle is our life and life is struggle.



  • I always give less importance to speech, Only after growing up in action that we should begin speaking.



  • Rather than idleness of people, it is the activeness of people that turns the wheels of the struggle.



  • I understand the dignity of a life, but our right is much more dignified than life, our freedom, and our self-respect.



  • We are not politicians, we are freedom fighters.



  • We have sowed the seed of an ideal, we grow it by irrigating with the blood of our martyrs. This seed will grow up into a luxurious tree and make our martyr’s dreams a reality.



  • The liberation Tigers are not different from the people. The Liberation Tigers is a people movement. The people are the Tigers.



  • To govern does not mean imposing the rule in the people or exercising the authority on the people, Governing is a work of service to the people, a service directing the people for good life.



  • The Tamils bowed their heads when repeatedly knocked and lived as slaves with shame. The greatness of getting them to live with self-respect was the work of out liberation movement.



  • Although the Tamils live widely all over the worlds, it is in Tamil Eelam that there is awakening of the national spirit. It is in Tamil Eelam the national personality is born. It is Tamil Eelam there are external signs of a separate state.



  • The struggle for the ideal of women liberation is a fiery child that was born on the laps of the liberation movement.


  • The strength in numbers or the strength in arms does not determine the victory in a battle. The firm determination, bravery, and the love of liberty are the qualities that determine victory.



  • My comrades whom I loved as my life, my generals who have been fighting along with me shoulder to shoulder, my fighters whom I fostered for several years, When they fall in the battle field my heart bursts. Yet in that grief I do not languish. All these losses add strength to my will towards my ideal.



  • The patterns of battle may change, but our battle ideal will never change.



  • If we do not win our freedom we have to live as slaves, we loose our self-respect and live in shame, live in eternal fear and suspense, get wiped out step by step. We have no alternative but to fight for freedom.



  • A liberation worrier’s death is not a normal death occurrence. This death is a historical incident. It is a miracle of high ideal becoming a reality. In fact a liberation fighter does not die. The fine of ideal which was his life never burns out. That fine of ideal becomes a historical force and captures the heart of others. It wakes up the national spirit of a race.



  • The ‘Cyanide’ is the symbol to show that we are dedicated to our ideal. As long as this cyanide hangs on our neck we will not fear any force in the world.


  • Whether it be non-violent struggle or armed struggle our liberation was has reached world’s peak.
  • Wednesday, April 16, 2008

    பச்சைத்தமிழன் காமராசர்.

    பச்சைத் தமிழன் காமராஜர். கர்மவீரர் காமராஜர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார்.
    முதல்அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். போன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.
    முதல்அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.முதல்அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற் காகவே காமராசரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது.
    முதல்அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார். அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள். மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார். அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை. வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.
    காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார். (எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்'’ என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்).
    காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப் போதைய அமைச்சர் ராசாராம் சொன்ன தகவல் என்று சூசாவி’ எழுதியுள்ளார்) காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.
    ராம் மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவ ராக இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய லோகியா சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.
    லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் “நேருவுக்குப் பின் யார் சு உங்கள் கருத்து என்ன?” என்று லோகியாவைச் சீண்டினார்.
    காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று லோகியா சொன்னார்.நேரு இறப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே லோகியா இவ்வாறு சொன்னார். அகில இந்திய காங்கிரசில் லோகியா இருந்த போதே தமிழ்நாட்டு காமராசரை லோகியா உன்னிப் பாகக் கவனித்து வந்துள்ளார். நேருவுக்குப் பின் காமராசர் தான் வருவார் என்பதை அப்போதே கணித்து வைத்து விட்டார்.நேருவுக்குப் பின் காமராசர் டில்லி அரசியலில் கிங் மேக்கர் ஆனார். ஆனால் அதைக் காண்பதற்கு லோகியா உயிருடன் இல்லை.நேருவுக்குப் பின் யார்? சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காக பணியாற்றிய தலைவர்கள் மறைந்து விட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் “பெருந்தலைவர்'’ என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்து துதிக்கும் தலைவர்தான் காமராஜர்.
    ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர். “நாட்டு நலனே எனது நலன்'’ என்று கருதி காந்திய வழியில் நின்று அரும்பாடுபட்ட காமராஜர் தான் கொண்ட கொள்கைகளை பதவி சுகத்துக்கு பறிகொடுக்காத உத்தமர் காமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கே முன்னுரிமையளித்தார்.
    அவரது ஆட்சி காலத்தில் தமிழகம் வளமிக்க மாநிலமாக பொற்கால ஆட்சி நடந்ததற்கு சில நற்சான்றுகளாய் விளங்கும் சாதனைகள் வருமாறு: காமராஜரின் ஆட்சி காலத்தில்தான்…
    • கீழ் பவானித்திட்டம்,
    • மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
    • காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
    • மணிமுத்தாறு,
    • அமராவதி,
    • வைகை,
    • சாத்தனூர்,
    • கிருஷ்ணகிரி,
    • ஆரணியாறு
    ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்களஅகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.
    தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டமகோவையில் பரம்பிக்குளம் சு ஆழியாறு திட்டம். தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
    • நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.
    • உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.
    • கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
    • பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை.
    • பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸசிமெண்ட் தொழிற்சாலைகள்.
    • மேட்டூர் காகித தொழிற்சாலை.
    • கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை
    • சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.
    • சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.
    • மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.
    • அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.தென் ஆற்காடு மாவட்டம் புகளூர்,
    • மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
    • 15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.
    • 18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.
    • 471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.
    • தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.

    6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.

    தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள்,
    6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள்,
    19 பொது வசதி பட்டறைகள்
    5 சமூக நல நிலையங்கள
    இவை போக ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன.
    பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது.

    Monday, August 21, 2006

    முதலில் ஒரு முயற்சி..

    வணக்கம்.

    ஏக்கக் குமுறல்கள் எல்லோருக்கும் இருக்கும்.

    இக்கால கட்டத்தில், ஒரு வாலிபனின், குமுறல்கள் என்னவாக இருக்கக்கூடும்.

    தொடர்வதில், எதைத் தொடர்வது என்ற நோக்கில், ஏக்கத்தோடு..

    உங்களோடு,

    தமிழ் வாலிபன்.